களுதாவளை சிவசக்தி முருகன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற சூர சம்ஹார நிகழ்வு

முருகன்பெருமானின் மிகவும் சக்தி வாய்ந்த விரதங்களுல் ஒன்றாக கருதப்படும் கந்த சஸ்டி விரதத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நேற்று சூர சம்ஹார நிகழ்வுகள் இடம்பெற்றன.
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, களுதாவளை சிவசக்தி ஸ்ரீமுருகன் ஆலயத்தில் சூர சம்ஹார நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் இந்த ஆலயத்தின் கந்த சஸ்டி விரதம் அனுஸ்டித்துவந்தனர்.

கடந்த ஐந்து தினங்களாக அனுஸ்டிக்கப்பட்டுவந்த கந்த சஸ்டி விரதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வான சூர சம்ஹார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

பண்டைய முறைகளில் படை பரிபாலங்களுடன் சென்று முருகப்பெருமான் போர் புரியும் காட்சி இங்கு சிறப்பாக நினைவூட்டப்படுகின்றது.

சூர சம்ஹார நிகழ்வினை தொடர்ந்து பரிகார அபிஸேகம் செய்யப்பட்டு முருகன்பெருமான் ஆலயத்துக்குள் கொண்டுவரப்பட்டு சிறப்பு பூசைகள் இடம்பெற்றன.