கோலாகலமாக ஆரம்பமான தமிழ் தூது தனிநயாகம் அடிகளாரின் ஜனன நூற்றாண்டு விழா

(எம்.எஸ்.எம்.நூர்,துதி)

தமிழ் தூது தனிநயாகம் அடிகளாரின் ஜனன நூற்றாண்டு விழா நேற்று காலை மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி மண்டபத்தில் ஆரம்பமானது.

மட்டக்களப்பு தனிநயாகம் அடிகள் ஜனன நூற்றாண்டு விழாச் சபையின் ஏற்பாட்டில் நேற்று ஆரம்பமான ஜனன நூற்றாண்டு விழா இன்றும் நடைபெறவுள்ளது.

புலவர்மணி ஏ.பெரியதம்பி பி;ள்ளை அரங்கில் விழா ஏற்பாட்டுச் சபையின் தலைவர் பேராசிரியர் சி.மௌனகுரு தலைமையில் ஆரம்பமான இந்த விழாவில் சமய பிரமுகர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், கல்வி அதிகாரிகள் மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த ஜனன நூற்றாண்டு விழாவில் தமிழ் தூது தனிநாயகம் அடிகளார் பற்றிய நினைவுரைகள் மற்றும் ஆய்வுகள் நடனம். பண்பாட்டு நடனம், விவாத அரங்கு என்பன நடைபெறவுள்ளன.