இந்துக்களின் விரதங்களின் ஒன்றான கந்தசஷ்டி விரதத்தின் இறுதிநாள் நிகழ்வான சூரசம்காரம் இன்று நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்றது.
கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற சூரசம்காரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பார்த்து முருகனின் அருள்பெற்றனர்.





