மட்டக்களப்பு அரசடிப்பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியின் ஜீ.வி.வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற இந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்று பிரதான வீதியை குறுக்காக கடக்க முனைந்தபோது நேராக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
