மட்டக்களப்பில் சர்வதேச தரத்தில் முதல் முறையாக பாலர் பாடசாலை திறப்பு

சர்வதேச தரத்தில் பாலர் கல்வியை ஒத்ததாகவும் தரமான ஒழுங்கமைப்புடன் இரண்டு வயதில் இருந்து பாலரின் மகிழ்ச்சியான கற்பித்தலை மேற்கொள்ளும் வகையிலான பாலர் பாடசாலை மட்டக்களப்பில் திறக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு திருமலை வீதியில்(தாண்டவன்வெளி தேவாலயத்துக்கு முன்பாக)இரண்டு வயது தொடக்கம் உள்ள பிள்ளைகள் உடல் உள ஆரோக்கித்துடனான கற்றலை மேற்கொள்ளும் வகையிலான FUTUREMINDS KINDERGARTEN & CHILD CARE சிறுவர் முன்பள்ளி திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சிகரமான கற்பித்தல் மகிழ்ச்சிகரமான சூழல் குழந்தைகள் மத்தியில் அறிவுத்திறனையும் ஆற்றலையும் வளர்க்கும் வகையில் இந்த முன்பள்ளி வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.

இந்த முன்பள்ளியின் திறப்பு விழா நேற்று குருவுருசுநுஆஐNனுளு முஐNனுநுசுபுயுசுவுநுN ரூ ஊர்ஐடுனு ஊயுசுநு சிறுவர் முன்பள்ளியின் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் கிழக்கு மாகாண ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் வி.இந்திரன்இமட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி திட்ட பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன்இமண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன்இமட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சிவநாதன்இகிழக்கு மாகாண முன்பள்ளி தவிசாளர் செல்வநாயகம்இமுன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்இதொழிலதிபர் விஸ்வநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வேறு எங்கும் நான் காணாதவகையில் சர்வதேச தரத்தில் இந்த பாடசாலை அமைக்கப்பட்டுள்ளது மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஒரு வரப்பிரசாதம் என இங்கு உரையாற்றிய ;இகிழக்கு மாகாண முன்பள்ளி தவிசாளர் செல்வநாயகம் தெரிவித்தார்.

இந்த சூழலில் கல்வி கற்கும் குழந்தைகள் சகல வளங்களையும் பெற்றவர்களாக எதிர்காலத்தில் மாற்றமடைவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.