அமிர்தகழி மெதடிஸ்த பாலர் பாடசாலையின் ஒளிவிழா நிகழ்வு

(லியோன்)   

மட்டக்களப்பு   அமிர்தகழி    மெதடிஸ்த  பாலர் பாடசாலையின்  ஒளிவிழா  நிகழ்வு  இன்று   மாலை அமிர்தகழி  சித்தி விநாயகர்  மகா வித்தியாலய  மண்டபத்தில்  நடைபெற்றது.

இவ்  ஒளிவிழா  நிகழ்வுக்கு   பிரதம  விருந்தினர்களாக  கோட்டமுனை  மெதடிஸ்த  ஆலய  முகாமைக்குரு . எ .சாம் சுபேந்திரன் , அமிர்தகழி   மெதடிஸ்த ஆலய குரு  எஸ் . பஞ்சரெட்ணம் , ஒய்வு  பெற்ற  மாகாணகல்வி  அதிகாரி எ .எம் .இ.போல் ,மற்றும்  முன்பள்ளி  வலயகல்வி பணிப்பாளர்  எம் .புவிராஜ்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்  ஒளிவிழா  நிகழ்வில்  இப் பாடசாலை  சிறார்களின்  கலை நிகழ்வுகள்   இடம்பெற்றதோடு , இப்  பாலர் பாடசாலையில்  கல்வி கற்று  அடுத்த ஆண்டு  பாடசாலைக்கு  செல்லும்  மாணவர்களுக்கு   சான்றிதழ்கள் மற்றும்  பதக்கங்கள்  அணிவிக்கப்பட்டு  கௌரவிக்கப்பட்டனர் .

இறுதி நிகழ்வாக   பிரதம  விருந்தினர்களின்  சிறப்பு  ஒளிவிழா உரைகளோடு , நத்தார்  தாத்தாவின்  ஆடல்,பாடல் மற்றும் பரிசுகள்  வழங்கப்பட்டு  ஒளிவிழா  இனிதாக  நிறைவு பெற்றது .