முதன்முறையாக பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச்சங்கம் என்பன இணைந்து இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடுசெய்திருந்தது.
பாடசாலை அதிபர் திருமதி நேசமணி துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் ரங்கநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கோட்டக்கல்வி பணிப்பாளர் டேவிட் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க போசகர் டாக்டர் அமரசிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் மாலை அணிவிக்கப்பட்டு நிகழ்வு இடம்பெறும் மண்டபத்துக்கு பேண்ட் வாத்தியங்களுடன் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.