தேற்றாத்தீவு தேனுகா கலைக்கழகத்தின் “தித்திக்கும் தீபாவளி”

களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்கு தேற்றாத்தீவு தேனுகா கலைக்கழகம் மற்றும் தேனுகா கலாமன்றம்,இந்து இளைஞர் மன்றம் இணைந்து நடாத்திய “தித்திக்கும் தீபாவளி” கலை நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றன.
தேற்றாத்தீவு ஸ்ரீகொம்புச்சந்தி பிள்ளையார் ஆலய முன்றிலில் இந்து இளைஞர் மன்ற தலைவர் த.விமலானந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் பிரபாகரன்,சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் புவிதரன்,களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி அபூபக்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஸ்ரீபள்ளிக்கட்டு கண்ணகியம்மன் ஆலயத்தின் மீது பாடப்பட்ட காவியம் அடங்கிய இறுவெட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது.இதன்போது ஆலயத்துக்கான காணியொன்றும் உரிமையாளரால் ஆலயத்துக்கு வழங்கிவைக்கப்பட்டது.

அத்துடன் ஆன்மீக பணிகளில் ஈடுபட்டுவருவோரும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.