( எஸ்.எம்.எம்.றம்ஸான் )
பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் கல்முனை ஸாஹிக் கல்லூரிக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
கடந்த சில நாட்களாக கல்முனை ஸாஹிறாக கல்லூரியில் நடைபெற்ற அசாதாரன நிலைமை தொடர்பான விடயங்களை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் பாடசாலைக்கு திடீர் விஜயம் செய்து பாடசாலையின் அதிபர்கள் பகுதித்தலைவர்கள மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய பாடசாலை முகாமைத்துவக அங்கத்தவர்களுடன் கலந்தாலோசித்ததுடன் நடந்த நிகழ்வு தொடர்பான விளக்கங்களையும் கேட்டரிந்து கொணடார்.
நேற்று இரவு பாடசாலையில் இடம் பெற்ற பெற்றோர்கள், பழைய மாணவர்கள், ஊர் பிரமுகர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்டட ஏழு அம்ஸக்கோரிக்கையை பாராளுமன்ற உறுப்பினரிடம் பாடசாலை சார்பாக பதில் அதிபர் எம்.எஸ்.எம்.ஹம்ஸா ஒப்படைத்தார்.
அங்கு பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றுகையில்.....
இது போன்ற நிகழ்வுகள் இனிமேலும் நடைபெறாதது தடுக்கப்பட் வேண்டும். பாடசாலைகளில் கண்டநிண்டமாதிரி யாரும் உள்ளுக்குள் வந்து பாடசாலை அதிபரின் அனுமதியின்றி ஆசிரியர்கள் மீதோ ஏனைய அதிபர்கள் மீதோ அல்லது நிருவாகத்தின் நடவடிக்கைகளிலோ தேவையில்லாமல் தலையீடக் கூடாது. அதற்கு இடமளிக்கவும் கூடாது.
இலங்கையில் மட்டுமன்றி சர்வதேசத்தில் கூட பேசப்படுகின்ற இப்பாடசாலையின் அதிபர் தரம் என்பது பல்கலைகழகங்களுக்கு ஒப்பானது அப்படிப்பட்ட இப்பாடசாலையின் எதிர்கால நலன் கருதி நீணட் கால நிரந்தர அதிபர் ஒருவரைக் கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகளை விரைவில் நான் மேற்கொள்வேன்.
நடை பெற்ற இச்சம்பவத்தை வன்மையாக நான் கண்டிப்பதுடன் இப்பாடசாலை விடயங்களில் நான் மிகக் கவணமாக இருப்பேன். ஏனெனில் நான் படித்தபாடசாலை இது என்னை இந்தளவிற்கு உயர்த்திய இப்பாடசாலை சீரழிய நான் இடமழிக்கமாட்டேன்
இப்பிரச்சினையோடு சம்பந்தப்பட்ட அதிகாரியின் பிரச்சினையொன்றும் புதிதல்ல கடந்த சில மாதங்களுக்கு முன் கல்முனை மஹ்மூத் மகளிர் கலலூரியிலும் இவ்வாறான பிரச்சினை ஒன்று இவரால் ஏற்பட்டு அங்கு பாதிக்கப்பட்டவர்கள் மாணவர்கள். ஆனால் இங்கு பாதிக்கப்பட்டவர்கள் அதிபர் ஆசிரியர்கள் ஏதோ ஒரு வகையில் இங்குள்ள ஆசிரியர்களால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டனர் அதற்கு எனது வாழ்த்துக்கள்.
இதற்காக முயற்சி செய்த அனைத்து சாராருக்கும் பாராளு மன்ற உறுப்பினர் என்ற வகையில் நன்றிகளைக் கூறிக்கொள்ள விரும்புவதோடு எதிர்காலத்தில் இப்பாடசாலையின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் என்னால் முடிந்த சகல விதமான உதவிகளையம் செய்வதோடு இப்பிரச்சினை தொடர்பாக சுமுகமான நடவடிக்கை எடுப்பதற்காக நான் அனைத்து சாராருடனும் பேசியுள்ளேன் விரைவில் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்டும் என்றார்.