( எஸ்.எம்.எம்.றம்ஸான் )
கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீரின் வீட்டில் இன்று நள்ளிரவு வெடிப்புச்சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதன்போது சேதங்கள் எதுவும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பா மாநகர சபை உறுப்பினர் கருத்துத் தெரிவிக்கையில்.
இன்று நள்ளிரவு நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது 12.50 மணியளவில் வீட்டுக்கு வெளியே வெடிப்புச்சத்தம் ஒன்று கேட்டது.
சத்தத்தைக் கேட்டு எழுந்த நான் வெளியில் வருவதற்குப் பயந்து பொலிஸின் அவசரப்பிரிவான 119க்கு அறிவித்தேன்.உடனே வந்த பொலிஸாரிடம் எனது முறைப்பாடடை கூறினேன்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.