பாடசாலைகளில் மாணவர்கள் மத்தியில் சுகாதார பழக்கவழக்கங்களை ஏற்படுத்தி ஆரோக்கியமான சமூதாயத்தினை கட்டியெழுப்பும் வகையில் கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு என்பன இணைந்து பாடசாலைகளில் இந்த திட்டத்தினை அமுல்படுத்திவருகின்றது.
இதன்கீழ் புளியடிமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சுகாதார வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றன.
சுகாதாரம் மனிதனை தூய்மைப்படுத்தும் என்னும் தொனிப்பொருளில் பாடசாலையில் சிறப்பு நிகழ்வு இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எஸ்.சேகர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய பிரதி உடற்கல்வி பணிப்பாளர் லவகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக சத்துருக்கொண்டான் பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் கிருபானந்தன் மற்றும் மாணவர்கள் ,ஆசிரியர்கள்,பெற்றோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது சுகாதாரத்தின் அவசியம்,மாணவர்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்கவேண்டியதன் அவசியம் ,வாழ்வில் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்கவேண்டியதன் அவசியம் என்பன தொடர்பில் சிறப்பு கருத்துரைகள் வழங்கப்பட்டன.
அத்துடன் சுகாதார வாரத்தினையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் இதன்போது பரிசுகள் கௌரவிக்கப்பட்டனர்.














