மட்டக்களப்பு வின்ஸன்ட் தேசிய மகளிர் பாடசாலையில் இருந்து தோற்றி மாவட்டத்துக்கு பெருமை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது மட்டக்களப்பு நகரின் நுழைவாயில் பகுதியில் இருந்து மாணவர்கள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
மட்டக்களப்பு வின்ஸன்ட் தேசிய மகளிர் பாடசாலையின் அதிபர் திருமதி கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி சுபாஜினி சக்கரவர்த்தி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு அதிகமாக பெற்ற 41 மாணவர்கள் மற்றும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள் உட்பட சுமார் 82 மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் பெற்றோர்,பழைய மாணவர்சங்க உறுப்பினர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளுக்கு பாடசாலையின் பழைய மாணவர் ஒருவர் ஒரு தொகை உதவிப்பணத்தினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.