மட்டக்களப்பில் பேகர் தினம் அனுஸ்டிப்பு

பேகர் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தின் பிரதான நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.
சின்ன உப்போடை சமூக கலாசார மண்டபத்தில் இலங்கை பேகர் போர்த்துகீச பேகர் நிதியத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கை பேகர் போர்த்துகீச பேகர் நிதியத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் அருட்தந்தை பிரான்சிஸ் எக்ஸ்விர் டயஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட கட்டளை அதிகாரி பிரிக்கேடியா கொடுப்பிலி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தர் ஜே.மலர்ச்செல்வன்,மட்டக்களப்பு மாவட்ட 231வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் சுகத்த திலகரட்ன,கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ராகல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் போர்த்துக்கீச ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பெருமளவு போர்த்துக்கீசர்கள் வருகைதந்து பல்வேறு வேலைப்பணிகளில் ஈடுபட்டு இங்கேயே வாழ்ந்தனர்.

இந்த சமூக கட்டமைப்பின் கலாசார விழுமியங்களையும் பண்பாடுகளையும் எதிர்கால சந்ததியினருக்கு அறிமுகம் செய்யும் வகையில் இந்த நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்படுகின்றன.

இதன்போது போர்த்துகீச பாரம்பரியங்களைக்கொண்ட கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மாணவர்களும்,விளையாட்டு வீரர்களும் கௌரவிக்கப்பட்டனர்.