தேற்றாத்தீவு புனித ஜுதா தெதயு திருத்தலத்தில் புனித யுதாவின் பெயர் கொண்ட திருவிழா

கிழக்கு மாகாணத்தில் பிரசித்திபெற்றதும் மிகவும் பழமை வாய்ந்ததுமான மட்டக்களப்பு புனித ஜுதா தெதயு திருத்தலத்தில் புனித யுதாவின் பெயர் கொண்ட திருவிழா கூட்டுத்திருப்பலி மிகவும் விமர்சையாக இடம்பெற்றது.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட தேற்றாத்தீவு புனித ஜுதா தெதயு திருத்தல திருவிழாவானது கடந்த மூன்று தினங்களாக சிறப்பாக இடம்பெற்றுவந்தது.

வெள்ளிக்கிழமை ஆரம்பமான இந்த திருவிழாவில் நேற்று சனிக்கிழமை நற்கருணை கொண்டாட்டம் சிறப்பாக இடம்பெற்றது.

இன்று காலை தேற்றாத்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பேதுரு ஜீவராஜ் தலைமையில் ஆரம்பமான இந்த திருவிழா கூட்டுத்திருப்பலியை தாண்டவன்வெளி பங்குத்தந்தை அருட்தந்தை கிரைன்ட் அன்னதாஸ் அடிகளார் மற்றும் குருக்கள்மடம் பங்குத்தந்தை அருட்தந்தை சாந்தன் இமானுவேல் அவர்களும் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.

அதனைத்தொடர்ந்து  புனித யுதாவின் திருவுருவ சுற்றுப்பிரகாரம் சிறப்பாக இடம்பெற்றது.இதனைத்தொடர்ந்து ஆலய முன்றிலில் அனைவருக்கும் ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.

இந்த திருவிழாவில் இம்முறை தென்னிலங்கை மற்றும் வட பகுதிகளில் இருந்து பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.