புன்னைச்சோலை பாலர் பாடசாலையின் பெற்றார் தின நிகழ்வு

(லியோன்)     

மட்டக்களப்பு   புன்னைச்சோலை  பாலர் பாடசாலையின்  பெற்றார்  தின  நிகழ்வு  இன்று  இடம்பெற்றது.
இன்  நிகழ்வு  பாடசாலை  அதிபர்  எ .அருந்தவம்   தலைமையில்  பாடசாலை  சிறார்களினால்  சிறப்பிக்கப்பட்டது.

இன்  நிகழ்வுக்கு  வருகைதந்த பட்டிருப்பு தேசிய பாடசாலை அதிபரும் , இப்பாலர்  பாடசாலையின்  அபிவிருத்தி  குழு  தலைவருமான எஸ் . தம்பிராசா  மற்றும்  இப்  பாடசாலை  அபிவிருத்தி  குழு  அங்கத்தவர்களையும் ,பெற்றார்களையும்  இச்  சிறார்களினால்  மலர்மாலை  அணிவித்து  வரவேற்க்கப்பட்டனர்.

அதனை  தொடர்ந்து  மங்கள விளக்கேற்றபட்டு,  சிறார்களினால்  பெற்றார்களை  கௌரவிக்கும்  நிகழ்வு  இடம்பெற்றது.

இதன்போது  சிறார்களினதும், பழைய  மாணவர்களினதும் கலை  நிகழ்வுடன் பெற்றார்  தின  நிகழ்வு நிறைவுபெற்றது.