இந்த ஆண்டுக்கான சஞ்சிகையினை வித்தியாசமான முறையில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இது தொடர்பில் ஆராயும் கூட்டம் மட்டக்களப்பு நகரின் கொலன்ட் வீதியில் உள்ள அரங்க ஆய்வுகூடத்தில் இடம்பெற்றது.
இந்த மண்முனை வடக்கு கலாசார பேரவையின் ஆலோசகரும் முன்னாள் பேராசிரியருமான சி;.மௌனகுரு தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் எழுத்தாளரும் கலாசார பேரவையின் உறுப்பினருமான மைக்கல் கொலின் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
நினைவுப்பந்தல் என்னும் தலைப்பில் வெளிவரவுள்ள இந்த நூலில் 1940 ஆம் ஆண்டு தொடக்கம் 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் வாழ்ந்த தெரிந்தெடுக்கப்பட்ட முதியவர்கள் தொடர்பில் பதியும் மலராக வெளிவரவுள்ளது.
2012ஆம் ஆண்டு மரபு அதன் மாற்றங்ககொண்டது என்ற தலைமைப்பில் தேனகம் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பில் ஆராயும் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும் என பேராசிரியர் மௌனகுரு தெரிவித்தார்.