“மடை” -பாரம்பரியக் கலைகளின் திருவிழா, கலைஞர்களின் கொண்டாட்ட கலை நிகழ்வுகள்

திருமலை சிவானந்த தபோவனத்தில்இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும்  “மடை” -பாரம்பரியக் கலைகளின் திருவிழா, கலைஞர்களின் கொண்டாட்டத்தில் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றன.
இவற்றில், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், இலங்கையின் பல்வேறு
பகுதிகளிலுமிருந்து வருகைதந்த கலைஞர்களின் ஆற்றுகைகளும் அளிக்கைகளும் நடைபெற்றன.
குறிப்பாக முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, புத்தளம், அம்பாறை, இறக்காமம், திருகோணமலை, மலையகத்தின் பண்டாரவளை, ஹட்டன், மற்றும் மட்டக்களப்பு பாரம்பரியக் கலைஞர்களின் கோவலன் கூத்து, காமன்கூத்து, கலகாட்டம், வாசாப்பு, பறங்கியர் சமூகத்தின் கப்பிறிஞ்ஞா, பறைமேளம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைகள் ஆள்ளுகை செய்யப்பட்டன.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிமை இரவு வரை நடைபெற்றுவரும் இக் கலைஞர்களின் திருவிழாவில் 200 வரையான கலைஞர்கள் கலந்து கொண்டதுடன், பல்கலைக்கழகங்கள், வெளி அமைப்புகள், மற்றும் பொது மக்களும் பெருமளவில் கலந்து கொண்டு பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.