அகவிருள் போக்கி அறிவொளிகொடுத்து சுடர்விட்டு ஒளிரும் ஆசான்களை கௌரவிக்குமுகமாக மாணவர்கள் பழைய மாணவர்கள் பாடசாலை அபிவிருத்தி குழு முதலியோர் நிகழ்வைஏற்பாடுசெய்துநடாத்தினர்.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கிழக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளர் எஸ்.மனோகரன் அவர்களும் சிறப்புவிருந்தினராக ஏறாவூர்ப்பற்று– 1 கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம்.பாலசுப்ரமணியம் மற்றும் கௌரவ விருந்தினராக வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் கே.ஞானேஸ்வரன் அவர்களோடு அழைப்பு அதிதிகளாக வித்தியாலய ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வின்போது அதிபர் மற்றும் ஆசிரி;யர்களுக்கு வாழ்த்துப்பாக்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.