கல்முனை ஸாஹிறா கல்லூரியில் நேற்று ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினை தொடர்ந்து மீண்டும் இன்று மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
நேற்று இடம் பெற்ற சம்பவம் தொடர்பில் கல்வி அதிகாரி கைது செய்யப்பட்டதாக கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அதிகாரி கூறியபின் குறித்த கல்வியதிகாரியை விடுவித்ததாக சில ஊடகங்கள் மூலம் அறிந்த மாணவர்கள் அவரை மீண்டும் கைது செய்யும்படியும் அவருடன் சேர்ந்து பிரதி அதிபரை தாக்கிய கல்வியதிகாரியின் சகோதரரையும் கைது செய்யும் படியும் அதேவேளையில் மாணவர்களுக்கு துர்வார்த்தையினால் தூற்றும் ஆசிரியரையும் பாடசாலையை விட்டு வெளியேற்றுமாறும் கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் சுலோகங்களை ஏந்திய வாரு கோசங்களை எழுப்பினர்.
பாடசாலை வளாகத்தில் ஆரம்பித்த இவ்வார்ப்பாட்டம் கல்முனை பிரதான வீதியுடாகச் சென்று கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வரைச் சென்று மீண்டும் பாடசாலைக்குத் திரும்பினர்.
கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் உட்பட கல்வியதிகாரிகள் பாடசாலைக்கு விஜயம் செய்து நடந்த விடயம் தொடர்பான அறிக்கையை பெற்றுக் கொண்டு மாணவர்களுடன் உரையாடியதையடுத்து ஆர்ப்பாட்;டம் முடிவுக்கு வந்தது.