கிழக்கு மாகாணத்தில் உள்ள பிள்ளை நேயப்பாடசாலைகளின் செயற்பாடுகளை வெளிப்படுத்தும் நிகழ்வு கிழக்கு மாகாண உதவிக்கல்விப்பணிப்பாளர் பி. உதயகுமார் தலைமையில் சனிக்கிழமை திருகோணமலை சென்மேரிஸ் கல்லுரியில் இடம் பெற்றது.
இதன் ஆரம்ப நிகழ்வில் கிழக்குமாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிசாம் மற்றும் வலயங்களின் உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் கல்வித்திணைக்கள உத்தியோகத்தர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.