பொலிஸ் திணைக்களமும் மட்டக்களப்பு சிவில் பாதுகாப்பு குழுவும் இணைந்து இந்த பிரார்த்தனை நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.
இந்த பிரார்த்தனை நிகழ்வில் கிழக்கு பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் மெவன் சில்வா உட்பட பொலிஸ் அதிகாரிகள்,உத்தியோகத்தர்கள் ,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை அன்னதாஸ் அடிகளாரினால் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
பொலிஸ் திணைக்களத்தின் 147வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.