மட்டக்களப்பு மாநகசபைக்குட்பட்ட வெட்டுக்காடு பிரதேசத்தில் இது தொடர்பான நிகழ்வு குறித்த பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் வை.டி.ராகல் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பொதுச்சுகாதார பரிசோதகர்களான ப.முருகதாஸ், செனவிரட்ன,அமுதபாலன்,இராஜேந்திரா மற்றும் மட்டக்களப்பு சிவில் பாதுகாப்பு குழுவின் பொலிஸ் பிரிவு தலைவர் ராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது வெட்டுக்காடு பிரதேசத்தில் உள்ள டெங்கு நுளம்பு பெருக்கம் உள்ள பகுதிகள் தொடர்பில் சோதனையிடப்பட்டன.
இப்பிரதேசத்தில் உள்ள 55 வீடுகள் சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் டெங்கு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த 07 வீட்டு உரிமையாளர்கள் மூன்று தினங்களுக்குள் துப்புரவுசெய்யவேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் வெட்டுக்காடு பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் வை.டி.ராகல் தெரிவித்தார்.
தொடர்ந்து டெங்கு பெருக்கத்துக்கு ஏதுவான வகையில் சூழலை வைத்திருப்போர் தொடர்பில் சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.