இருதயபுரத்தில் உள்ள வீட்டில் இருந்து சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் இருதயபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

இருதயபுரம் 11ஆம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றின் அறையிலிருந்து இந்தச் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

7 பிள்ளைகளின் தந்தையான அழகையா இருதயராஜ் (வயது 45) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வழமைபோன்று குறித்த அறையில் உறங்கிக்கொண்டிருந்தவர்  காலையில் சடலமாக காணப்பட்டதாக தெரியவருகிறது.

கடந்த 3 வருடங்களாக நீரிழிவு நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த  இவர், தொழில் எதுவுமின்றி வீட்டிலேயே இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான விசாரணையை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார்  மேற்கொண்டுள்ளனர்.