வாழ்வின் எழுச்சிஅலுவலகத் தோட்டம் மண்முனை வடக்கு பிரதேச செயலாகத்தில்

வாழ்வின் எழுச்சித் திட்டம் பட்டதாரிபயிலுனர்களால் மேற் கொள்ளப்படும் மண்முனை வடக்கு பிரதேச செயலக அலுவலகத் தோட்டத்தில் பயிர் கன்றுகள் நடும்சம்பிரதாய பூர்வ நிகழ்வு நேற்று திங்கட்கிழமை பிரதேச திட்டமிடல் பணிப்பாளர்  சிவராஐh தலைமையில் நடைபெற்றது.
வாழ்வின் எழுச்சித் திட்டம் மூலம் பணனாளிகளின் வாழ்வாதாரங்களை வலுவாக்குவதற்காக வீட்டுத்தோட்டங்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு பட்டதாரிபயிலுனர்கள் முன்னோடியாக மண்முனைவடக்கு பிரதேசசெயலகத்தில் மிளகாய்,கத்தரி,தக்காளி,புடோல்,கறிமிளகாய் போன்றபயிர்க்கன்றுகளை நட்டனர்  இது இளைஞர் சமூகத்திற்கும் ஏனைய பயனாளிகளுக்கும் முன்னுதாரணமாகஅமையும் எனவும் குறிப்பிட்டனர்.

மண்முனைவடக்கு பிரதேச அபிவிருத்தித் தலைவவரும் ஐனாதிபதியின் ஆலோசகரும்  கிழக்குமாகாண சபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் வழி காட்டலின் கீழ் பிரதேச செயலாளர் கிரிதரனின் ஆலோசனையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ் அலுவலகத் தோட்டத்திகான முதல் கன்றுகளை முன்னாள் கிழக்கமாகாண சபைஉறுப்பினர் பூ.பிரசாந்தன் பிரதேசசெயலாக திட்டமிடல் பணிப்பாளர் சிவராஐh திவிநெகும இணைப்பாளர் நமசிவாயம் உள்ளிட்டோரும் முதற்கன்றுகளைணநட்டுஆரம்பித்துவைத்தனர்.