மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை நிலையில் உள்ள கணவனை இழந்த பெண்களின் வாழ்வாதாரத்துக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
தெரிவுசெய்யப்பட்ட 116 கணனை இந்த பெண்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு நேற்று மட்டக்களப்பு இருதயபுரம் கெத்செமனே கொஸ்பல் தேவாலயத்தில் இடம்பெற்றது.
டில்மா அமைப்பிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் கெத்செமனே கொஸ்பல் தேவாலயத்தின் ஏற்பாட்டில் இந்த தொழில் உதவிப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
கெத்செமனே கொஸ்பல் தேவாலயத்தின் போதகர் பி.டபிள்யு.மரியதாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் இந்திரன்,டில்மா அமைப்பின் பணிப்பாளர் எஸ்.கமலநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கடந்த கால யுத்த சூழ்நிலையினால் கணவன்மார்களை இழந்தவர்களுக்கு தையல் மெசின்,மா அரைக்கும் இயந்திரம்,மீன்பிடி உபகரணங்கள் உட்பட பல்வேறு தொழில்துறை உபகரணங்கள் உட்பட சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.