பட்டிருப்பு கல்வி வலயத்தின் 04வது சாரணர் பாசறை

(தவக்குமார்)

பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் சாரண சபையின் 04 வது
சாரணர் பாசறை திக்கோடை தென்னந் தோப்பில் 12.09.2013-14.09.2013 வரை
12 பாடசாலைகளைச் சேர்நத நூற்றுக்கு மேற்பட்ட சாரணர்களுடனும் திரி சாரணர்களுடனும் நடைபெற்றது.

பட்டிருப்பு வலய சாரணர் தலைவியும் வலயக்கல்விப்பணிப்பாளரும்
திருமதி.நகுலேஸ்வரி-புள்ளநாயகம்; தலைமையிலும் பயிற்சித் தலைவர் அதிபர் அலோஸியஸ், உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர என்.நாகராஜா, இவர்களுடன் பாசறையினை ஒழுங்கமைத்து நடத்தியவர் ஆ.புட்கரன் (உதவி மாவட்ட சாரண ஆணையாளர் போரதீவுப்பற்று). இப்பாசறையில் மட்டக்களப்பு மேற்கு வலய பாடசாலைகளும்உதவி மாவட்ட சாரண ஆணையாளர் ஆனந்தராஜாவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பட்டிருப்பு வலயத்;தைச் சேர்ந்த சாரணர் தலைவர்களும் உதவி மாவட்ட சாரணர் ஆணையாளர்களும் கலந்து கொண்டனர் இறுதி நாள் நிகழ்வில் உதலி கல்வி பணிப்பாளர் உலகேஸ்பரம்,பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பாசறைத்தீ நிகழ்வில் மாவட்ட சாரண ஆணையாளர் திரு.ஆனந்தராஜர் கலந்து கொண்டார்.          

இப்பாசறைக்கு திக்கோடை கணேச வித்தியாலய அதிபர் ,ஆசிரியர்கள் ,கிராம ஆலயபரிபாலன சபை ,விளையாட்டுக்கழகம்,பாசறை அயல் வீட்டினர் மற்றும் திக்கோடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் ஒத்துழைப்பு வழங்கினர்.