முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஏற்பாட்டில் இந்த மாவட்ட கராத்தே சம்மேளனம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசரும் மாவட்ட கராத்தே சம்மேளன தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சிவநாதன்,மட்டக்களப்பு கல்வி வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கிரிதரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கௌரவ அதிதிகளாக மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்பரன், தொழிலதிபர் மா.செல்வராசா, தேசிய கராத்தே பயிற்சியாளர் சத்துருசிங்க,தொழில்நுட்ப ஆலோசகர் கே.ரி.பிரகாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஆரம்பக்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கராத்தே துறையில் உள்ள 45 மாணவர்கள் மாவட்ட சம்மேளனத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதன்போது மாவட்ட கராத்தே துறைக்கு பங்களிப்பு செய்தவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கராத்தே வீரர்களை ஒருங்கிணைத்து அவர்களின் மேம்பாட்டினை நோக்காகக்கொண்டு இந்த கராத்தே சம்மேளனம் அமைக்கப்பட்டுள்ளது.