சிறைக் கைதிகள் தினத்ததை முன்னிட்டு கைதிகள் தினக் கொடிகள் விற்பனை செய்யும் நிகழ்வு இன்று புதன்கிழமை ( 18.09.2013) முதல் எதிர்வரும் இம்மாதம் 30ஆம் திகதி வரை நாடெங்கிலும் ஆரம்பமாகியுள்ளது.
மட்டக்களப்பு சிறைச்சாலையின் அதிகாரிகள் முதன் முதலாக மாவட்ட அரச அதிபர் பி.எஸ். ஏம். சாள்ஸ் அவர்களுக்கும் மற்றும் மேலதிக அரச அதிபர் எஸ். பாஸ்கரன் ஆகியோருக்கு மாவட்டச் செயலகத்தில் வழங்கி கொடி விற்பனையை ஆரம்பித்தனர்.
இந்நிகழ்வில் சிறைச்சாலை அத்தியட்சகர் ஏ. கே. பண்டார, சிறைச்சாலை நலனபுரி சங்கத் தலைவர் ரி. அருணகிரிநாதர் மற்றும் செயலாளர் ஆர். சிறிநிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறைக் கைதிகள் தினம் 06.09.2013 வெள்ளி முதல் 12.09.2013 வியாழன் வரை சிறைக் கைதிகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.