மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இந்த தொழிற்சந்தை இடம்பெற்;றது.
இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வழிகாட்டலில் 2013ஆம் ஆண்டுக்கான தொழில் சந்தையாக இது இடம்பெற்றது.
இன்று காலை 9.00மணியளவில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பணிப்பாளர் நைரூஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் தவராசா,மட்டக்களப்பு தொழில்நுட்பக்கல்லூரி அதிபர் ரவிச்சந்திரன்,இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட உத்தியோகத்தர்களான கலாராணி,அமீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது தொழில் வழங்கும் நிறுவனங்களை சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் தொழில் துறை திணைக்களங்களைச்சேர்ந்த தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இந்த தொழிற்சந்தையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டு தமது தொழில் தொடர்பான விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தனர்.