மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுநகர் பகுதியில் ஜே.ஆர் குண்டு என அழைக்கப்படும் மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை செயலிழக்கச் செய்யப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இப்பிரதேசத்தில் திங்கட்கிழமை மாலை சிறுவர்கள் இருவர் விளையாடிக்கொண்டிருந்ததைக் கண்ணுற்ற ஒருவர் விமானப்படையினரிடம் அறிவித்து அவர்கள் ஊடாக விசேட அதிரடிப்படையினருக்குத் தகவல் வழங்கப்பட்டு நேற்றைய தினம் செயலிழக்கச் செய்யப்பட்டு;ள்ளது.
ஜே.ஆர் குண்டு 2001 காலப்பகுதிகளிலிருந்து படையினரால் பாவிக்கப்பட்டு வந்ததொன்றாகும். வலையறவு, புதுநகர், பிரதேசங்கள் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு முகாம்களைக் கொண்டிருந்த பிரதேசம் என்பதுடன் தற்போதும் மட்டக்களப்பு விமானநிலையம் அப்பிரதேசத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அறியப்படாத வித்தியாசமான பொருள்களைக் கண்டால் பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவிக்க வேண்டும் என்பது அறிவுறுத்தலாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
