கோட்டைக்கல்லாறில் சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் தரம் ஏழு கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீட்டின் அருகில் உள்ள கொய்யா மரத்தில் இருந்தே குறித்த சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

கோட்டைக்கல்லாறு முதலாம் வட்டாரம் பவான் வீதியை சேர்ந்த செ.கிரிசாந்த் (12)என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சுடலம் பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பிலான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.