மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தியில் ஊடகவியலாளர்களின் பங்கு என்னும் தலைப்பில் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு மட்டக்களப்பு மாவட்;;ட செயலகத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த செயலமர்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்,தகவல் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் ஹில்மி முகமட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் நிகழ்வின் ஆரம்பத்தின்போது கருத்துகள் பரிமாறப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் அபிவிருத்தி திட்டங்களை வெளிக்கொணரும் வகையில் இதன்போது மாவட்ட அரசாங்க அதிபரினால் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சிரேஸ்ட ஊடகவியலாளர் எம்.எல்.ஏ.எம்.நிலாம் தலைமையில் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான ஊடக கருத்தரங்கு இடம்பெற்றது.

இதில் சிரேஸ்ட ஊடகவியலாளரும் சட்டத்தரணியுமான ஏ.டபிள்யு.வைஸ்னால் ஊடக சட்டம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன் தினகரன் வார மஞ்சரியின் செய்தியாசிரியரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான விசு கருணாநிதியினால் அபிவிருத்தி தொடர்பில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு தொடர்பில் கருத்துகள் பரிமாறப்பட்டன.

பிராந்திய ஊடகவியலாளர்களின் நன்மைகருதி இலங்கை தகவல் திணைக்களம் இந்த செயலமர்வினை ஏற்பாடுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.