கொக்கட்டிச்சோலை திருத்தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர் உற்சவம்-இலட்சக்கணக்கானோர் பங்கேற்பு

கல் நந்தி புல்லுண்டு தனுப்;போட்டு சாணமிட்டு இந்து மதத்தின் பெருமையை பறைசாற்றி ஆங்கிலேயரை புறமுதுகு காட்டி ஓடவைத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை திருத்தான்தோன்றீஸ்வரர் ஆலய மஹோற்சவ பெருவிழாவின் தேர்த்திருவிழா இன்று இலட்சக்கணக்கான அடியார்கள் புடை சூழ சிறப்பாக இடம்பெற்றது.

வுசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள இறைவனுக்கு விசேட பூசைகள் செய்யப்பட்டு விநாயகப்பெருமானும் சிவபெருமானும் தேரில் ஆலயத்தினை வலம் வந்தனர்.

இரு சித்திரத்தேரினையும் ஆயிரக்கணக்கான அடியார்கள் இழுத்துவந்த காட்சி அனைவரையும் மெய்சிலிக்க வைத்தது.

கடந்த 07ஆம் திகதி திருத்தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம குரு சிவசிறி மு.கு.சச்சிதானந்தக் குருக்கள் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமான மஹோற்சவ பெருவிழாவானது நாளை இடம்பெறவுள்ள தீர்த்த உற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.