களுவாஞ்சிகு பொலிஸாhருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சென்ற பொலிஸாரே இந்த கஞ்சா தோட்டத்தினை முற்றுகையிட்டுள்ளனர்.
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்தவின் ஆலோசனையின் கீழ் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பி.ரி.நஸீரின் நெறிப்படுத்தலில் பொலிஸ் பரிசோதகர் அபூபக்கர் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினரே கஞ்சா தோட்டத்தினை முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது அங்கு பயிரிடப்பட்டிருந்த சுமார் ஐந்து அடி உயிரம் கொண்ட 30க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரவெள்ளி தோட்டத்துக்கு இடையே இந்த கஞ்சா தோட்டம் செய்கைபண்ணப்பட்டுள்ள நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் பரிசோதகர் அபூபக்கர் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் கைதுசெய்யப்பட்டவரையும் கஞ்சா செடிகளையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருட்களின் பாவனை அதிகரித்துள்ள நிலையில் அவற்றினை தடுக்கும் வகையில் கிழக்கு பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பி.ரி.நஸீர் தெரிவித்தார்.