(சிவம்)
சமூக சேவைகள் அமைச்சின் அனுசரணையுடன் மொறட்டுவை கல்வி சமூக கலாசார நிறுவகத்தின் ( எஸ்கோ ) ஏற்பாட்டில் விசேட தேவையுடையவர்களுக்கான சமாதான கலைவிழா-2013 இன்று ஞாயிறு ( 15.09.2013) மாலை சத்துருக்கொண்டான் சர்வோதய நிலையத்தில் நடைபெற்றது.
இரு நாட்களாக இடம்பெற்ற இக்கலை விழாவின் இறுதிநாளான இன்று நாடு முழுவதுமுள்ள 20 விசேட தேவையுடையவர்களின் இல்லங்களிலிருந்து 450 பேர் பங்கு கொண்டனர்.
கடந்த 30 வருடங்களாக நடனம், சங்கீதம், பாட்டு, கலை மற்றும் கைவேலை போன்ற துறைகளில் போட்டிகள் இடம்பெற்றன இவ்வருடம் இப்போட்டிகள் மட்டக்களப்பில் நடாத்தப்பட்டன.
வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகளும் மற்றும் சான்றிதழ்களும் சமூக சேவைகள் அமைச்சின் பிரதியமைச்சர் சந்திரசிறி சூரியாராச்சி, சர்வோதய ஸ்தாபகர் கலாநிதி ஏ.ரி. ஆரியரட்ண ஆகியோர் வழங்கி வைத்தனர்.
அமைச்சின் செயலாளர் இமில்டா சுகுமார், அமைச்சின் பணிப்பாளர் சுஜீத் ரவீந்திர உட்பட பலர் கலந்து கொண்டனர்.