மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில்; உள்ள உணவு கையாளும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள்,ஊழியர்களுக்குமான உணவு பாதுகாப்பும், தனிநபர் சுகாதாரமும் என்னும் தலைப்பிலான செயலமர்வு நடத்தப்பட்டது.
உள்ளுராட்சி வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன் கீழ் மட்டக்களப்பு மாநகரசபையும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடுசெய்திருந்தது.
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் சிவநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி எப்.ஆர்.பி.ரஞ்சன் அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் உணவு பாதுகாப்பும், தனிநபர் சுகாதாரமும் என்ற தலைப்பில் கருத்துரைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை உத்தியோகத்தர்கள்,பொதுச்சுகாதார பரிசோதகர்கள் உட்பட பலர் கொண்டனர்.