கிராண் சித்திவிநாயகர் ஆலய இராஜகோபுரத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

மட்டக்களப்பு, கிரான் சித்தி விநாயகர் ஆலயத்தின் இராஜ கோபுரத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை  அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

ஆலயத் தலைவர் ந.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி  பி.எஸ்.எம்.சாள்ஸ், மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த இராஜ கோபுரமானது  9 தளங்களையும் 108 அடி உயரத்தினையும் கொண்டு அனைத்து அம்சங்களும் அமையப்பெற்றதாக அமைக்கப்படவுள்ளது.