மிதக்கும் உணவகம் திறந்துவைப்பு

(எம்.எஸ்.நூர்)

காத்தான்குடி வாவியில் மிதக்கும் உணவகமொன்று நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
காத்தான்குடி நகர சபையினால் கின்னியாவிலிருந்து கொண்ட வரப்பட்ட பாதையில் (படகில்) நோன்புப் பெருநாளை முன்னிட்டு இந்த மிதக்கும் உணவகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காத்தான்குடி நகர சபையின் எற்பாட்டில் நடைபெறும் இந்த மிதக்கும் உணவகத்தை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நேற்று திறந்து வைத்து வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் காத்தான்குடி நகர சபை பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மிதக்கும் உணவகத்திற்கு வாவியின் ஓரத்திலிருந்து படகின் மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இந்த மிதக்கும் உணவகத்தில் சிற்றுண்டிகள் மற்றும் உணவுகள் வைக்கப்பட்டுள்ளன.

இதன் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.