மேற்படி வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரை அங்கு வந்திருந்த மூவர் நேற்றிரவு தாக்கினர் என்று தமக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்டையில் தாம் மூன்று பேரைக் கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமைபுரியும் என்.எம். முரளீதரன் என்பவரே தாக்குதலுக்குள்ளான நிலையில் தற்சமயம் மாவடிவேம்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக சந்திவெளி வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏறாவூர் பொலிஸார் இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.