மட்டக்களப்பு மாவடட்டம் வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள சுரவனையூற்று கிராமத்தை சேர்ந்த துரைராஜா நீர்முகராசா (வயது 33) யோகராசா சசிக்குமாரன் (வயது 30) சிவராசா தர்மராசா (வயது 33 ) குகாலிங்கம் சந்திரசேகரம் ( வயது 23 ) கங்காதரன் திருக்குமார் ( வயது 37) சந்திரசேகரம் திருக்கணேஸ் ( வயது 30 ) ஆகிய குறித்த ஆறு பேரையுட் நாட்டிற்கு திருப்பி அழைத்து வர ஏற்பாடு செய்து தருமாறு கோரி விபரங்களையும் சம்பித்துள்ளனர்.
குருநாகலையை சேர்ந்த முகவரொருவரால் தொழில் வாய்ப்புக்காக மலேசியாவிற்கு ஒரிரு மாதங்களுக்கு முன்னர் அழைத்து செல்லப்பட்ட இவர்கள் மலேசியாவிலுள்ள கும்பலொன்றிடம் ஒப்படைக்கப்பட்டு; துன்புறுத்தப்படுவதாவும் குற்றச்செயல்கள் போன்ற வேறு தேவைகளுக்கு பயன்படுத்த முற்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசாவிடம் உறவினர்கள் புகார் செய்திருந்தனர்.
இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியத்தின் தலைமையகத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.