கிழக்கு மாகாணத்தில் ஆரம்ப பிள்ளைப் பருவகல்விக்கான நூல்கள் அறிமுகம்-கிழக்கு மாகாண கல்வியில் ஒளியூட்டும் நடவடிக்கை

(சசி ஜதாட்சன்)

கிழக்கு மாகாண ஆரம்பப் பிள்ளைப் பருவ கல்வியினை ஓருமைப்படுத்தி சரியான அடித்தளத்தை ஈடுவதற்கான ஆக்கபூர்வமான செயற்பாட்டினை கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியகம் மேற்கொண்டு வரும் நிலையில் மூவினமும் வாழும் கிழக்கில் இதுவரை ஆரம்ப பிள்ளைப் பருவக் கல்வியில் பல குறைபாடுகள் நிலவி வந்த போதும் அவற்றில் பாரிய நீண்ட கால குறைபாடாக ஆரம்ப பிள்ளை பருவகல்வி அபிவிருத்திக்கான கற்பித்தலுடனான செயற்பாடுகள்,ஆசிரியர்களுக்கான வழிகாட்டல்,பிள்ளைப் பருவ கல்வி தொடர்பான கோட்பாடுகளும் பின்னணியும் என்பன இல்லாமையே ஆகும்.

கிழக்கு மாகாணத்தில் ஆரம்ப பிள்ளைப் பருவகல்விக்கான மேற்படி நூல்கள் இல்லாமையினால் சிறார்களின் கல்வி சரியாக வழிநடாத்தப்படவில்லை இதனால் ஆரம்ப பிள்ளைப் பருவகல்வி பாடத்திட்டம் மாகாணத்துக்குள்ளேயே இடத்துக்கு இடம் வேறுபட்டதாகக் காணப்பட்டது.அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒன்றையும் வேறு அமைப்புக்கள் வேறு ஒன்றையும் ஆசிரியர்கள் ஒன்றையுமாக கற்பித்து வரும் நிலையுமாகவே இன்று வரை உள்ளது.இந் நடவடிக்கை சிறார்களின் பிள்ளைப் பருவக் கல்வியை சரியாக வழிநடாத்த முடியாத நிலை காணப்பட்டதுடன்.

இந் நிலையினைத் தவிர்க்க கிழக்கு மாகாண ஆரம்ப பிள்ளை பருவகல்வி அபிவிருத்திக்கான   கற்பித்தலுடனான செயற்பாடுகள்,ஆசிரியர்களுக்கான வழிகாட்டல்,பிள்ளைப் பருவ கல்வி தொடர்பான கோட்பாடுகளும் பின்னணியும் ஆகிய நூல்கள் தமிழ் சிங்கள ஆகிய இரு மொழிகளிலும் இன்ற அறிமுகம் செய்யப்படுகின்றது.இந் நூல்களின் அறிமுகம் ஆனது எதிர்கால சிறார்களின் கல்விக்கு ஒளியூட்டும் காத்திரமான செயற்பாடாக இன்று அமைகின்றது.

ஆரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் 2010 ஆம் ஆண்டு 2010 ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க பாலர் பாடசாலை கல்வி நியதிச் சட்டத்திற்கு அமைவாக உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண பாலா பாட்சாலைக் கல்விப் பணியகம் ஆரம்ப பிள்ளைப் பருவ கல்வி அபிவிருத்திக்கான பல்வேறு செயற்பாடுகளை விரைவாக முன்னெடுத்துச் செல்கின்றது.மூன்று வருடங்கள் ஆரம்பிக்கப்பட்ட அப் பணியகத்தின் புதிய தவிசாளர் பொன்.செல்வநாயகம் நியமிக்கப்பட்டு 13 மாதங்கள் ஆன நிலையில் அவரால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு செயற்பாடுகளில் மிக முக்கியமான மயில் கல்லாக இச் செயற்பாடு அமைகின்றது.

புhலர் பாடசாலைக் கல்விப் பணியகத்தால் உணரப்பட்ட இத் தேவையினை பூர்த்தி செய்வதற்கு பிளான் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் 10 மில்லியன் ரூபா உதவியுடன் இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு நூல் வெளியிடப்படுவதுடன் கிழக்கு மாகாணத்தில் உள்ள 3822 முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் இந் நூல்கள் தொடர்பான இரண்டரை நாள் பயிற்சியம் வழங்கப்படவுள்ளமையும் இச் செயற்பாட்டை மெலும் வலுவடையச் செய்வதாக உள்ளது.

இதனால் பாலர் பாடசாலைக் கல்விப் பணியகத்தின் வலையமைப்பி;ல் கீழ் உள்ள ஆசிரியர்கள் சிறார்களும் எதிர்கால சிறார்களும் பயன் அடைவதுடன் இது ஒரு வரலாற்று நிகழ்வாகவும் அமைகிறது.

இந் நூல்கள் ஆனது ஏற்கனவே வேறு மாகாண சபைகள்,அரச சார்பற்ற நிறுவனங்கள்,தேசியக் கல்வி நிறுவகம் ஆகியவற்றினால் வெளியிடப்பட்ட நூல்களை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக் கழகப் பேராசிரியர்கள்,விரிவுரையாளர்கள்,கல்வித் திணைக்கள அதிகாரிகள்,சிறுவர் வைத்திய அதிகாரிகள்,சிறுவர் இலக்கிய படைப்பாளிகள்,சிறந்த ஓவியர்கள்,கல்வியோடு துறை சார்ந்த அறிஞர்கள்,புத்திஜீவிகள்,அனுபவம் வாய்ந்த பாலர் பாடசாலை ஆசிரியர்கள் அடங்கிய குழுவிஜனரால் ஆய்வு செய்யப்பட்டு இந் நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்க அதிகார சபைகளை உருவாக்கி செயற்படுத்துவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாண சிறார்களின் கல்விக்கு கிழக்குமாகாண சபை வழங்கிய முக்கியத்துவம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்ட அதிகார சபைகளில் முதலாவது பாலர் பாடசாலைக் கல்விப் பணியகம் அiமைகிறது.இதனை முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கிய நிலையில் புதிய முதலமைச்சர் இதனை வழிநடாத்திச் செல்கின்றமையானது சிறார்களில் எதிர்காலக் கல்விக்கு ஒளியூட்டுவதாக அமைகிறது.
குpழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகம் உருவாக்கப்பட்டதன் பயனாக 1763 தமிழ் சிங்கள் பாலர் பாடசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 3822 ஆசிரியர்களும் 58030 மாணவர்களும் உள்ள பெரிய வலையமைப்பாக இப் பணியகம் காணப்படுகின்றது.

இப் பணியகம் ஆனது நகர கிராம,பின்தங்கிய பிரதேசம் எனப் பாகுபாடின்றி ஒரே பார்வையில் பணியாற்றுவதனால் பல்வேற வளர்ச்சி கண்டு செல்கின்றது.தற்போது இதன் செயற்பாடாக புதிய மாதிரிப் பாடசாலைகளை அமைத்தல் ,தளபாட உபகரணம் வழங்கல்,பாலர்களுக்கான இசைக்கருவி விளையாட்டு உபகரணம் வழங்கல்,பெற்றோர்களுக்கான அறிவூட்டல் வழங்கல்,நீண்டகால செயல்திட்ட அறிக்கை என்பவற்றையும் துரிதமாக மேற்கொண்டு வரும் நிலையிலேயே இன் மூன்று புத்தகங்களையும் வெளியிடுகின்றது.

இந் நூல் அறிமுக விழா இன்று(2013.08.13)முற்பகல் 10.00 மணிக்கு மட்டக்களப்பு நுயளவ டுயபழழn ர்ழவநட இல் பாலர் பாடசாலைக் கல்விப் பணியகத் தவிசாளர் பொன்.செல்வநாயகத்தின் ஏற்பாட்டில் முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸிஸ் தலைமையில் இடம்பெறும் நிலையில் பிரதம விருந்தினலாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீவ் அப்துள் மஜீட் கலந்து கொள்ளதுடன் கௌரவ அதிதிகளாக பிளான் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி எட்வாட் நெட் எஸ்பி,கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க,வீதி  அபிவிருத்தி நீர்ப்பாசன வீடமைப்பு அமைச்சர் மீரா சாகிபு உதுமாலெப்பை ,விவசாய கால்நடை மீன்பிடி சுற்றுலாத்துறை அமைச்சர் காசிம் நசீர் அகமட் ,சுகாதார விளையாட்டு தொழில் கல்வி அமைச்சர் எம்.எம்.மன்சூர்,மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதி ஆலோசகருமாகிய சி.சந்திரகாந்தன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதே வேளை சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர்,மாகாண சபை உறுப்பினர்களான அமீர் அலி சிகாப்தீன்,அப்துள் பாறுக் முகம்மது சிப்லி ஆகியோரும் விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டீ.எம்.எஸ்.அபயகுணவர்த்தன மற்றும் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.