(கிருஸ்ணா)
புலம்பெயர் தேசங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லும் எமது உறவுகள் அங்கு எமது பாரம்பரியங்களை பேணும் செயற்பாடுகள் உயர்ந்த நிலையில் உள்ளன.
பல்வேறு கலாசார முறைமைகளுக்குள்ளும் மொழி பயன்பாட்டுகளுக்குள்ளும் எமது கலைகளை பேணும் செயற்பாடுகள் வரவேற்க கூடியது.
மட்டக்களப்பு கல்லடியை சேர்ந்த லண்டனில் வதியும் குடும்பத்தினர் தமது மகளின் வீணை அரங்கேற்றத்தினை கல்லடி பேச்சியம்மன் ஆலய முன்றிலில் நிகழ்த்தினர்.
பேச்சியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு இடம்பெற்றுவரும் நிலையில் நேற்று இரவு ஆலய முன்றிலில் இந்த அரங்கேற்றம் செய்யப்பட்டது.
லண்டனில் வதியும் திரு,திருமதி சுந்தராஜாவின் புதல்வியான செல்வி சிறிதானியாவின் அரங்கேற்றமே இவ்வாறு இடம்பெற்றது.லண்டனில் உள்ள சங்கீத வித்துவான் சிவதாரணி சகாதேவனிடம் வீணை கற்றுவருகின்றார்.
கல்லடி உப்போடை நான்காம் குறிச்சி மக்களின் ஏற்பாட்டில் இந்த அரங்கேற்ற நிகழ்வு இடம்பெற்றது.
மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் கலாபூசணம் திருமதி இராஜேஸ்வரி தட்சணாமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இந்த அரங்கேற்ற நிகழ்வில் வாய்ப்பாட்டை செல்வி ஜனனி,லோகதர்ஸ்னி ஆகியோர் வழங்கியிருந்ததுடன் நித்தியானந்தன் மிருதங்கத்தினை வழங்கியிருந்தார்.