மாமாங்கம் சகாயபுரம் சதாசகாய அன்னை ஆலய வருடாந்த திருவிழா இன்று காலை கொடியிறக்கத்துடன் சிறப்பாக நிறைவுபெற்றது.
போர்த்துக்கேய காலத்தினை சேர்ந்ததாக கருதப்படும் இந்த ஆலயம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க மக்களின் மிக முக்கிய ஆலயமாக கருதப்படுகின்றது.
கடந்த வெள்ளிக் கிழமை மாலை 5.30 மணிக்கு சதாசகாய அன்னை ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை இக்னேஸ் ஜோசப் அடிகளாரின் தலைமையில் கொடியோற்றத்துடன் நவநாட்கள் ஆரம்பமாகியது.
தொடர்ந்து இடம்பெற்றுவந்த உற்சவத்தில் நேற்று சனிக்கிழமை மாலை சதாசகாய அன்னையின் திருஉருவம் வீதி பவனி சிறப்பாக இடம்பெற்றது.இதன்போது அருட்பணி டக்ளஸ் ஜேம்ஸ் அடிகளாரின் தலைமையில் நற்கருனை வழிபாடும். ஆசிரும் இடம்பெற்றது.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திருவிழா கூட்டுத்திருப்பலி மட்டக்களப்பு மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி பிரான்ஸ் சேவியர் டயஸ் அடிகளாரின் தலைமையில் ஒப்புகொடுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கொடியிறக்கம் செய்யப்பட்டு அடியார்களுக்கு அன்னையின் அருளாசி வழங்கப்பட்டது.
ஆத்துடன் ஆலயத்தின் நவநாட்களை ஒட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன் குருத்துவ வாழ்வில் வெள்ளிவிழா காணும் மட்டக்களப்பு மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி பிரான்ஸ் சேவியர் டயஸ் அடிகளார் கௌரவிக்கப்பட்டார்.
இந்த வழிபாடுகள் மற்றும் நிகழ்வுகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவானோர் கலந்துகொண்டனர்.