கோமாரியில் நவீன உபகரணங்களை பயன்படுத்தி புதையில் தோண்ட முற்பட்டவர்கள் கைது

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமாரி பிரதேசத்தில் நவீன உபகரணங்களைப் பயன்படுத்தி புதையல் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட குழுவினரில் ஒருவரை இராணுவத்தினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தேடப்படும் இருவருடைய அடையாள அட்டைகள் மற்றும் பொருள்களும் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை கோமாரி காட்டுப்பகுதியில் ஒரு வைத்தியர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் அடங்கிய குழுவினர் தங்கம், மற்றும் அரிய பொருள்களைக் கண்டறியும் நவீன சாதனம் ஒன்றைப் பயன்படுத்தி புதையலைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருந்த வேளை ஒருவர் கோமாரி இராணுவத்தினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.ஏனைய இவரும் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் பொத்துவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஏனைய இருவரும் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதையல் தோண்டும் முயற்சியில் பாவிக்கப்பட்ட இந்த சாதனம் சுமார் 40 மீற்றர் சுற்றளவில் உள்ள புதையலைக் கண்டிறியக் கூடியது என்றும், இவ்வாறு நவீன சாதனம் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சி என்றும் இராணுவத்தினர் தெரிவித்தனர்.