கிழக்கு மாகாண விளையாட்டு விழாவும் வர்ண கௌரவிப்பும்.

கிழக்கு மாகாண விளையாட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை காலை முதல் 18ஆம்திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை வரை மட்டக்களப்பு சிவானந்தா தேசியப்பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.


இதன் இறுதி நிகழ்வில், 2012ஆம்ஆண்டு தேசிய ரீதியில் விளையாட்டில் பிரகாசித்தவர்களைக் கௌரவிக்கும் வர் கௌரவிப்பு நிகழ்வும் நடைபெறவுள்ளது.

முதல் நாள் நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார, விளையாட்டு மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதன் பிரதம அதிதியாகவும்மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.பாஸ்கரன், உதவி மாவட்டச் செயலாளர் வி.வாசுதேவன் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொள்கின்றனர்.

அதே நேரம், இறுதிநாள் கௌரவிப்பு வர்ண கௌரவிப்பு நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார, விளையாட்டு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் எம்.ஐ.முகமட் மன்சூர் கலந்து கொள்கிறார். கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ்.அபேகுணவர்த்தன, அமைச்சின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

இரண்டு நாட்கள் நடைபெறும் கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் மாகாணத்தின் விளையாட:டு வீரர்களின் விளையாட்டுப் போட்டிகள் பலவும் நடத்தப்படவுள்ளன தாக ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ள மாகாண விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் தெரிவித்தார்.