இக்கண்காட்சியை கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைத்துறை விரிவுரையாளரும் பிரபல பெண்ணிலைவாத ஒவியருமான திருமதி அருந்ததி ரெட்ணராஜ் ஆரம்பித்து வைத்தார்.
ஓவியக் கலைஞர் சுசிமன் நிர்மலவாசன் இலங்கைத் தமிழ் சூழலில் காத்திரமான ஓவியக் கலையாக்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒருவர். இக்கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை காலை 09.00 மணி தொடக்கம் மாலை 06.00 மணி வரைக்கும் இடம்பெறவுள்ளது.
இன்று நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், பேராசிரியர் எஸ்.யோகராஜா, கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவர் கலாநிதி சி.ஜெயசங்கர், மட்டக்களப்பு கல்வியல் கல்லூரி பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன், வந்தாறுமூலை விசூ;ணு மகா வித்தியாலய அதிபர் எஸ்.மோகன், மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன, எழுத்தாளர்கள், நுண்கலைத்துறை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.