இந்த இரண்டு குளங்களும் இணைக்கப்படுவதன் மூலம் சித்தாண்டி முதல் கிரான் வரையிலுள்ள பல கிராமங்களில் வருடாவரும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது தடுக்கப்படுவதுடன், சிறுபோக பெரும் போக விவசாயங்கள் அதிகமான காணிகளில் செய்கைபண்ணமுடியும் என்பதுடன் உப உணவுப் பயிர்ச்செய்கைகளையும் மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
நீர்ப்பாசன அமைச்சில் அதன் செயலாளர் ஐவன் சில்வாவுடன் இறுதியாக நடைபெற்ற கலந்துரையாடலையடுத்தே இந்த அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் நீர்ப்பாசன திணைக்களம் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கித்துள் மற்றுமு; உறுகாமம் குளங்களினை இணைக்கும் செயற்திட்டம் தொடர்பான சாத்தியவள ஆய்வினை அவுஸ்திரேலிய நிறுவனம் மேற்கொண்டிருந்தது, கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இது தொடர்பிலான கலந்துரையாடலிலும் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் இரண்டு குளங்களினதும் இணைப்பினால் ஏற்படும் பயன்கள் குறித்து தெளிவு படுத்தியிருந்தார்.
கித்துள் மற்றும் உறுகாமம் ஆகிய இரு குளங்களையும் இணைக்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக கித்துள் குளப் பிரதேசத்திற்கு கடந்த யூன் 5ஆம்திகதி நீர்ப்பாசன மற்றும்நீர் முகாமைத்துவ அமைச்சர் நிமால் சிறிபல டி சில்வா, மீள்குடியேற்ற பிரதி அமைச்சரின் அழைப்பின் பேரில் வருகை தறந்திருந்தார்.
அதன் போது, அமைச்சர், பிராந்திய நீர்ப்பாசனப் பணிப்பாளர் எஸ்.மோகனராஜா மற்றும் பொறியியலாளர்கள், பொது மக்களுடன் கலந்துரையாடினார்.
இத்திட்டத்திற்கென 2500 மில்லியக் ரூபாய் செலவிடப்படவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முக்கிய குளங்களில் இரண்டான கித்துள் மற்றும் உறுகாமம் குளங்கள் இணைக்கப்படுவதன் மூலம் சுமார் 15ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மேலதிகமாக செய்கை பண்ணக்கூடிய வாய்ப்பு ஏற்படுவதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்படும் மிகப்பெரிய நீர்த்தேக்கமாகும் அமையும். இதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக ஏற்படும் பெரும் பாதிப்புக்கள் குறைக்கப்படும்.
கித்துள் மற்றும் உறுகாமம் குளங்களை இணைக்கும் முயற்சியை தாம் சமல் ராஜபக்ச நீர்ப்பாசன அமைச்சராக இருந்தது முதல் மீள்குடியேற்ற பிரதி அமைச்சரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதனால், வெள்ளத்தால் பாதிக்கப்படும் வந்தாறுமூலை, சித்தாண்டி, கிரான், சந்திவெளி, மாவடிவேம்பு எனப் பல கிராமங்கள் பாதுகாக்கப்படும் சந்தர்ப்பம் உள்ளது.
உறுகாமம் குளத்தின் கொள்ளளவு 18,600 ஏக்கர் அடியாகும். கித்துள் குளத்தின் கொள்ளளவு 4200 ஏக்கர் அடியாகும். இரண்டும் இணைக்கப்படும் போது 95 மில்லியன் கனஅடி கொள்ளளவு உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
.jpg)