மட்டக்களப்பு மன்முனை வடக்கு பிரதேச மட்ட முதியோர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஊடாக ஹெல்ப் ஏஜ் நிறுவன அனுசரனையுடன் முதியோர்களுக்கான இலவச மருத்துவ சிகிச்சை நடமாடும் சேவை முகாம் 13.08.2013 கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இதில் மட்டக்னளப்பு கல்லடி தொடக்கம் மஞ்சன் தொடுவாய் வரையிலான கிராம சேவை பிரிவுக்குற்பட்ட முதியோர்களுக்கு இந்த இலவச மருத்துவ சிகிச்சை நடமாடும் முகாம் இடம்பெற்றது.
இந்த சிகிச்சை முகாமில் 170 பேர் சிகிச்சை பெற்றுக்கொண்டனர். இதில் 65 பேருக்கு உடல் நல மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மற்றைய 105 பேருக்கும் கண் சம்பந்தப்பட்ட மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு மூக்குகண்ணாடிகள் வழங்கப்பட்டன.
இன்று காலை மட்டக்களப்பு இருதயபுரத்தில் இருதய நாதர் மண்டபத்தில் இந்த இலவச நடமாடும் மருத்துவ சிகிச்சை முகாம் இடம்பெற்றது.
இந்த மருத்துவ முகாமை பெரிய ஊறணி முதியோர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதில் இருதயபுரம் மத்திய, பெரிய ஊறணி மற்றும் கருவப்பங்கேணி கிராம சேவை பிரிவுக்குற்பட்ட முதியோர்களுக்கு உடல் நல மற்றும் கண் சம்பந்தப்பட்ட மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த முகாமுக்கு ஹெல்ப் ஏஜ் நிறுவனத்தின் டாக்டர் ரஞ்சித் மற்றும் உதவும் கரங்கள் நிறுவனத்தின் பொறுப்பாளர் ஞானம். பிரதேச செயலாளர் கிரிதரன், சமூக சேவை உத்தியோகஸ்தர் திருச்செல்வம், முதியோர் சங்க ஒன்றியத்தின் தலைவர் பரமலிங்கம், மண்முனை வடக்கு முதியோர் ஒன்றியத்தின் செயலாளர் சிவஸ்ரீ வி.கே.சிவபாலன் ஜயர், முதியோர் சங்க பொருளாளர் எல்.நவரட்ணராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.