கல்முனை,பாண்டிருப்பு ஸ்ரீவடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கின் தீமிதிப்பு உற்சவம் இன்று சிறப்பாக இடம்பெற்றது.

நேற்று ஆலயத்தில் நோற்பு கட்டுதல் மற்றும் கடற்குளிப்பு வைபவம் சிறப்பாக இடம்பெற்றதுடன் அனைத்து துன்பங்களையும் நீக்கும் சக்தி மகா யாகமும் நடத்தப்பட்டது.

வருடாந்த திருச்சடங்கின் தீமிதிப்பு உற்சவம் இன்று காலை ஆயிரக்கணக்கான அடியார்கள் சூழ இடம்பெற்றது.