தமிழர்களின் கலாசாரம் திட்டமிட்ட வகையில் சீரழிக்கப்பட்டுவருகின்றன – அரியம் எம்.பி.

(நடனம்)

தற்போது திட்டமிட்ட முறையில் தமிழர்களின் கலாசாரத்திற்குள் வேறு கலாசாரங்கள்  பின்னிப் பிணைந்து தமிழர்களின் கலாசாரங்களை திட்டமிட்ட முறையில் சீரழிக்கப்பட்டு வருகின்றது. இதனால் எமது தனித்துவம் இழக்கப்படுவதுடன் தமிழர்களுக்கு ஆபத்தும் ஏற்படக் கூடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் குறிப்பிட்டார்.

பட்டிப்பளை வெண்ணிலா கலைக்கழகத்தின  பத்தாமாண்டு நிறைவு விழா அண்மையில் பட்டிப்பளை வைரவர் ஆலய முன்றிலில் இடம்பெற்ற போது கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் தற்போது இரண்டு விடயங்களில் முதல் நிலையில் இருக்கின்றது அதில் ஒன்று 21.5 வீதம் வறுமையுடையதாகவும் மற்றையது அதிகப்படியாக மதுபான பாவனையுடைய மாவட்டமாகவும் மட்டக்களப்பு மாவட்டம் இருப்பது கவலைதரும் விடயமாகும்.

இந்த நிலைமையில் இருந்து  மாற்றவேண்டுமாக இருந்தால் மதுபாண பாவனையினைக் குறைக்கவேண்டும். அதைவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமாக இருக்கும் மதுபான சாலைகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முற்றுப்பெற்று சமாதானம் நிலவும் இக் காலப்பகுதியில்தான் மதுபானப் பாவனையும்,சமூகச்சீர்கேடுகளும் அதிகமாக இடம்பெறுவதனை அவதானிக்க முடிகிறது.

ஆகையால் தங்கள் பிள்ளைகள் மதுபானப் பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டுமானால்  பெற்றோர்கள் அவதானமாக இருப்பதுடன் பிள்ளையின் மீது அதிக கவனம் செலுத்தவேண்டும் என்றார்.